புதுச்சேரி முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து


புதுச்சேரி முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 10 May 2021 11:59 PM GMT (Updated: 10 May 2021 11:59 PM GMT)

புதுச்சேரி முதல்-அமைச்சர் விரைவில் குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை, 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்-அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இந்தநிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை நலமாக இருக்கிறது என்று ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அவர் கொரோனாவில் இருந்து குணமடைய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்-மந்திரி என்.ரங்கசாமி நலமுடன் இருப்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு நலம்பெற்று மக்கள் பணியை தொடர விழைகிறேன். பெருந்தொற்று காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’, என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story