அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு


அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2021 12:05 AM GMT (Updated: 11 May 2021 12:05 AM GMT)

அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பஸ்கள் இயக்கம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை மாநகரில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வரும் வகையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் முதல்கட்டமாக 200 பஸ்கள் 10-ந் தேதி (நேற்று) முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story