மாநில செய்திகள்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு + "||" + 3 vacant states in Tamil Nadu DMK has a chance to win the election soon

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றபோது, அப்போதைய அமைச்சரவையில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் தோல்வி அடைந்தனர். என்றாலும், அ.தி.மு.க.வே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டார். அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி முதல் மாநிலங்களவை எம்.பி.யாக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.

ராஜினாமா

இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி கே.பி.முனுசாமி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் நிறைவடைகிறது. தற்போதைய நிலையில், ஆர்.வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டும், கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகளும் உள்ளன.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் இருந்தும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இருவரும் எம்.எல்.ஏ.க்களாக இன்று (செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்க உள்ள நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு

ஏற்கனவே, அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். அவர் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற நிலையில், அவரது பதவிக்காலமும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளது.

இந்த பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில், தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை பார்த்தால், தி.மு.க. கூட்டணி 159, அ.தி.மு.க. கூட்டணி 75 என்ற அளவில் உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், 3 எம்.பி.க்கள் இடங்களிலும் தி.மு.க.வே வெற்றிபெற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
2. தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி.
3. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வாகிறார்கள் சட்டசபையில் நாளை பொறுப்பேற்பு
சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். சட்டசபையில் நாளை (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.
4. சட்டமன்ற தேர்தல்: அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வி ஒரு இடம்கூட கிடைக்காமல் ஏமாற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில்கூட வெற்றி கிடைக்காததால் இக்கூட்டணியினர் ஏமாற்றம் அடைந்தனர்.
5. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு - தி.மு.க. புகார்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.