தொற்று மேலாண்மைக்கான 3 கொள்கைகள் என்ன? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு


தொற்று மேலாண்மைக்கான 3 கொள்கைகள் என்ன? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 11 May 2021 4:42 PM GMT (Updated: 11 May 2021 4:42 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

தொற்று மேலாண்மைக்கான 3 கொள்கைகள் வருமாறு:-

* எந்த பொருளும் பற்றாக்குறை என்பதை மறு. பற்றாக்குறை இருக்கிறது என்று பல்வேறு ஊடகங்களில் இருந்து வந்தாலும் மிகுந்த பலத்துடன் மறு.

* குறைந்த அளவு மக்களுக்கு பரிசோதனை செய். புதிய தொற்று எண்ணிக்கையை குறைத்து சொல்.

* புதைத்தல், தகனம் செய்யப்படும் இடத்தில் இருந்து வரும் எண்ணிக்கையை புதை. கொரோனா தொடர்பான இறப்புகளை குறைத்து காட்டு. மொத்த கருவுறுதல் வீதத்தை குறைத்து காட்டு.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story