தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு


தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2021 10:57 PM GMT (Updated: 11 May 2021 10:57 PM GMT)

தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு.

சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விதம் குறைத்து வருகிற 16-ந்தேதி முதல் விற்பனை செய்ய அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக விற்பனை விலைப்பட்டியல் ஆவின் நிா்வாகம் மூலமாக வெளியிடப்பட்டது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பால் கொள்முதல் மற்றும் பால் வினியோகம் ஆகியவை தங்குதடையின்றி செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் வினியோகம் மற்றும் பால் கொள்முதல் தொடர்பான தகவல்களுக்கு ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

குறிப்பாக வடமண்டலத்திற்கு உதவி பொதுமேலாளர் (விற்பனை) பிரவீனா செல்போன் எண் 96008 06211 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். அத்துடன் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களை சேர்ந்த விற்பனை பிரிவு மற்றும் கொள்முதல் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story