வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2021 11:14 PM GMT (Updated: 12 May 2021 1:29 AM GMT)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, 

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 1.5 முதல் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதால் 12-ம் தேதி (இன்று) முதல் வரும் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

12-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா, தரும புரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப் பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்காலிலும் 13-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வடஉள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் கன் னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். 

15-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். தென்மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

11-ம் தேதி காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், விளாத்திகுளத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சியால் அரபிக் கடல் பகுதியிலும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளிலும் 12 மற்றும் 13-ம் தேதி களில் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story