மாநில செய்திகள்

மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Dr. Ramadoss insists on doubling the salaries of medical staff

மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பதாக வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவத்துறை பணியாளர்களின் தியாகம் அளவிட முடியாதது. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள். கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனாவுக்காக மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து விட்டது.

இந்த நிலையில், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பான சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.அதற்காக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி முடிக்கும் வரை, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணியின் போது உயிர்த்தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியுதவியை தாமதமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவை அனைத்தையும் விட, மருத்துவத்துறையினரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்: 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சை
1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் வகையில் ‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
2. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
3. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பளம்
கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.
4. சமந்தாவுக்கு அதிக சம்பளம்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
5. உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.