ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு


ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2021 2:20 AM GMT (Updated: 12 May 2021 2:20 AM GMT)

ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு.

சென்னை, 

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா உதவித்தொகையின் முதல் தவணைத்தொகையான ரூ.2 ஆயிரம், அனைத்து அரிசி பெறும் குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தொகை வருகிற 15-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், கொரோனா நிவாரணத்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதால் 16-ந் தேதியன்று (காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

அந்த நாளிலும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இதற்கான விடுமுறை நாள் பின்பு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story