மாநில செய்திகள்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம் + "||" + Comedian Nellai Siva dies

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்.
சென்னை, 

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்தார். நேற்று மாலை நெல்லை சிவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. இறுதி சடங்குகள் இன்று (புதன்கிழமை) மாலை பணகுடியில் நடக்கிறது.

நடிகர் நெல்லை சிவா 1985-ல் ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார். சீவலப்பேரி பாண்டி, ராவணன், மகாபிரபு, வெற்றி கொடி கட்டு, ரன், அன்பே சிவம், சாமி, வின்னர், திருமலை, திருப்பாச்சி, அன்பே ஆருயிரே, கிரீடம், தோரணை, கந்தசாமி, சகுனி, பட்டத்து யானை, எலி, மிருதன், பச்சை விளக்கு, உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நெல்லை சிவா கடைசியாக திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து இருந்தார்.

அவர் நெல்லை தமிழில் பேசி நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. வடிவேலுவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இருவரும் நடித்த கிணத்த காணோம்... காமெடி பெரிய வரவேற்பை பெற்றது. நெல்லை சிவாவுக்கு திருமணம் ஆகவில்லை. அவரது மறைவுக்கு நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா காலத்தில் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
2. நடிகர் சித்தார்த் காட்டம்
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்களில் தனது பார்வையை கருத்துக்களாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
3. கார் மோதி பிரபல நடிகர் காயம்
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
4. ‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்
‘‘நான் தவறான ஆளாக இருந்தால் 135 படங்களில் நடிக்க முடியுமா?’’ -நடிகர் கார்த்திக் குமுறல்.
5. அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்
அமலாக்கத்துறை விசாரணை போதை மருந்து வழக்கில் நடிகர் ராணா ஆஜர்.