மாநில செய்திகள்

விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு + "||" + Chennai court orders Rs 31.70 lakh compensation for research student injured in accident

விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு

விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு
விபத்தில் படுகாயம் அடைந்த ஆராய்ச்சி மாணவிக்கு ரூ.31.70 லட்சம் இழப்பீடு சென்னை கோர்ட்டு உத்தரவு.
சென்னை, 

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவியான இவர், கடந்த, 2017-ம் ஆண்டு வேளச்சேரி பிரதான சாலையில் மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கனரக வாகனம், பூர்ணிமாவின் மொபட் மீது மோதியது.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அதைத்தொடர்ந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் பூர்ணிமா வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.ரேவதி, விபத்து காரணமாக மனுதாரருக்கு 95 சதவீதம் இயலாமை ஏற்பட்டுள்ளது. அதற்கு கனரக வாகனத்தை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.

எனவே, மனுதாரருக்கு ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.31 லட்சத்து 70 ஆயிரத்தை வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவரித் துறை முதன்மை செயலாளருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. ரூ.3¾ கோடி வரி விவகாரம்: கார்த்தி சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரூ.3.86 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
3. தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருது மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தவிர வாடகைதாரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தவிர, வாடகைதாரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட மற்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளை வரும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி: தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி: தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.