பிரசவத்தின்போது உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு


பிரசவத்தின்போது உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2021 12:59 AM GMT (Updated: 13 May 2021 12:59 AM GMT)

பிரசவத்தின்போது உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை, 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பின்னாத்தூர் மன்னன்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2018-ம் ஆண்டு கர்ப்பிணியான எனது மனைவி தீபிகா (வயது 28) பிரசவத்துக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவைசிகிச்சை மூலம் அவருக்குப் பெண்குழந்தை பிறந்தது. இந்தநிலையில் திடீரென்று அவர் இறந்துவிட்டார். அப்போதுதான் எனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டது தெரியவந்தது. அது தொடர்பாக எந்த தகவலையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னிடம் தெரிவிக்கவில்லை. டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாகவே என் மனைவி இறந்துள்ளார். எனவே உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘மனுதாரருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு ஒத்துக்கொண்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Next Story