மாநில செய்திகள்

கொரோனா பேரிடர் பணிகளுக்கிடையே மனச்சுமையை குறைத்தது: அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் தினம் கொண்டாட்டம் + "||" + Corona Disaster Reduces Depression: Nurses Day Celebration in Government Hospitals

கொரோனா பேரிடர் பணிகளுக்கிடையே மனச்சுமையை குறைத்தது: அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் தினம் கொண்டாட்டம்

கொரோனா பேரிடர் பணிகளுக்கிடையே மனச்சுமையை குறைத்தது: அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் தினம் கொண்டாட்டம்
கொரோனா பேரிடர் பணிகளுக்கிடையே மனச்சுமையை குறைக்கும் வகையில், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சர்வதேச நர்சுகள் தினம் நேற்று ‘டீன்’கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
சென்னை, 

கொரோனா பேரிடரில் நர்சுகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. தற்போது அதிதீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் 2-வது அலையில் நோயாளிகளுக்கு இரவு-பகலாக களத்தில் நின்று தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மனச்சுமையை குறைக்கும் வகையில் நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் சர்வதேச நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.

இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பிறந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நர்சுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நர்சுகள் சமூகத்துக்கு ஆற்றும் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

பெண் புறாக்கள்

அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று சர்வதேச நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.

பின்னர் நர்சுகள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து நர்சுகளுக்கு வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து கொரோனா முன்கள பணியாளர்களான நர்சுகள் கூறியதாவது:-

‘கொரோனா பேரிடர் காலத்தில் சொந்த பந்தங்களே ஒதுங்கி, எட்டி நின்று பார்க்கும் நிலையில், உறவினராக, ஒரு தாயாக, நோயாளிகளுடன் கூடவே இருந்து பணிவிடை செய்யும் ‘பெண் புறாக்கள்’ தான் நர்சுகள். இத்தகைய பேரிடரில், எங்களுக்குள் இருக்கும் மனச்சுமையை குறைக்கும் வகையில் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது, எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

‘டீன்’கள் தலைமையில்...

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நர்சுகளின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு தந்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா நிவாரண நிதியையும், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்-அமைச்சரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நிச்சயமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது ’ என்றனர்.

இதேபோல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி தலைமையிலும், சென்னை அரசு பல் ஆஸ்பத்திரியில் ‘டீன்’ டாக்டர் விமலா தலைமையிலும், எழும்பூர் மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் இயக்குனர் டாக்டர் விஜயா தலைமையிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் பாலாஜி தலைமையிலும் நர்சுகள் தினம் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூலை-1 புலவர் குழந்தை பிறந்த தினம்
தமிழறிஞர் புலவர் குழந்தை 1906-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தார். திண்ணைப் பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சிறுவயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார்.
2. தேசிய மருத்துவர் தினம்
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், ‘தேசிய மருத்துவ தினம்’என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
3. பன்னாட்டு கூட்டுறவு தினம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, ‘கூட்டுறவு’. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது.
4. 7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு
7-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிப்பு.
5. உலகப் பெருங்கடல் தினம்
பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கோள்களில், பூமியில் மட்டுமே பரவியிருக்கும் ஒன்று, கடல்.