தொடரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு தொற்று பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 May 2021 3:36 PM GMT (Updated: 13 May 2021 3:36 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,532 ஆண்கள், 13,089 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,991 பேரும், கோவையில் 2,835 பேரும், செங்கல்பட்டில் 2,173 பேரும், மதுரையில் 1,331பேரும், திருவள்ளூரில் 1,251 பேரும், கன்னியாகுமரியில் 1,079 பேரும், திருச்சியில் 940 பேரும், ஈரோட்டில் 910 பேரும், நெல்லையில் 781 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 174 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 99 ஆயிரத்து 727 ஆண்களும், 5 லட்சத்து 99 ஆயிரத்து 720 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 188 பேரும், தனியார் மருத்துவமனையில் 109 பேரும் என 297 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 768 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 19,287 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 லட்சத்து 98 ஆயிரத்து 945 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன்  1 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story