மாநில செய்திகள்

சீமானின் தந்தை மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + MK Stalin's condolences on Seaman's father's death

சீமானின் தந்தை மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சீமானின் தந்தை மரணம் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை யா.செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
இளையான்குடி, 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை யா.செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே தனது சொந்த ஊரான அரணையூர் கிராமத்தில் செந்தமிழன் வசித்து வந்தார். விவசாயியான இவரது முதல் மனைவி அருளாயி. இவர்களது மகன் மரியநாயகம்.

அருளாயி இறந்தவுடன் அன்னம்மாள் என்பவரை செந்தமிழன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீமான், இளையதம்பி ஆகிய 2 மகன்களும், அருளாயி, அன்பரசி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று அவர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் சீமான் சென்னையில் இருந்து புறப்பட்டு அரணையூருக்கு வந்தார்.

செந்தமிழன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள். செந்தமிழன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
3. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைபணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திட்டமிட்டுள்ள காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
4. வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.
5. உத்தரகாண்டில் கனமழைக்கு 34 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்
உத்தரகாண்டில் கனமழைக்கு 34 பேர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.