மாநில செய்திகள்

ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - கமல்ஹாசன் + "||" + My heartfelt congratulations to the brothers and sisters who are celebrating the great day of Ramadan Kamalhasan

ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - கமல்ஹாசன்

ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - கமல்ஹாசன்
ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பிருத்தல் ஆகும். இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இன்றைய தினம் இந்தியாவில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியில் தலைவர்கள், நாட்டு மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “பிறருக்கு ஈவதும் பிறர் ஈகையை ஏற்பதுமாக, அனைத்து மானுடர்களும் உலக சமுதாயமாக வாழும் காலமிது. பரஸ்பர  நலமும் நன்மையும் விரும்பி ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இணைவோம். உயர்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அருள்வளம் நிறைந்த ரமலான் நோன்பு
கல் மனதையும் கரைந்து போகச் செய்து, அதனை இரக்கமுடையதாக மாற்றிடும் தன்மை என்பது, பசியினை உணர்வது கொண்டு நிகழ்வதாகும்.
2. ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு
ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு.
3. கொரோனா தடுப்பூசி ரமலான் மாத நோன்பை பாதிக்காது; அமீரக பத்வா கவுன்சில் அறிவிப்பு
அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பத்வா கவுன்சில் சார்பில் காணொலி கூட்டம் வாயிலாக அபுதாபியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.