டன் கணக்கில் தங்கம் விற்பனையாகும் அட்சய திருதியை ஊரடங்கால் களை இழந்தது


டன் கணக்கில் தங்கம் விற்பனையாகும் அட்சய திருதியை ஊரடங்கால் களை இழந்தது
x
தினத்தந்தி 14 May 2021 1:31 PM GMT (Updated: 14 May 2021 1:31 PM GMT)

அட்சய திருதியை நாள் மக்களுக்கு இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் அதிகம்.

 இதற்காகவே வாடிக்கையாளர்களை கவர முன்பதிவு பரிசுகள் அறிவித்து நகைக்கடைகள் சார்பில் கவர்ச்சிக்கரமான விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்தப்படும். பொதுமக்களுக்கு இன்றைய தினத்தில் நகை வாங்க ஆசைப்படுவார்கள் நகை கடைகளிலும், அதிகாலை முதலே களைகட்டும்.

சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க முன்னணி கடைகளில் கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அட்சய திருதியை கொண்டாட்டம் முற்றிலும் களை இழந்து காணப்பட்டது.

பொதுவாக இந்த நாளில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் தங்கம் விற்பனை ஆகும். ஆனால் நேற்று குண்டு மல்லி அளவு கூட தங்கம் வாங்க யாரும் வாங்கவில்லை. இதனால் கோடிக்கணக்கான அளவுக்கு நடக்கும் வியாபரம் முற்றிலும் முடங்கி விட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் ஐதீகப்படி வீடுகளில் அட்சய திருதியையை கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story