கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
x
தினத்தந்தி 15 May 2021 10:06 AM GMT (Updated: 15 May 2021 10:06 AM GMT)

கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.

சென்னை, 

கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. அதில், 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story