வைகை அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு


வைகை அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 May 2021 10:31 AM GMT (Updated: 21 May 2021 10:31 AM GMT)

வைகை அணையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி,

தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில மாதங்களாக 60 அடிக்கும் மேல் காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 65 அடியாக உள்ளதால், இந்த ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறப்பதற்கான அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 

இதற்கான அறிவிப்பை அடுத்த ஓரிரு நாட்களில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story