ஜூன் மாத தொடக்கத்திற்குள் கொரோனா உச்சத்தை அடையும்: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின்


ஜூன் மாத தொடக்கத்திற்குள் கொரோனா உச்சத்தை அடையும்: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 May 2021 5:40 AM GMT (Updated: 22 May 2021 6:06 AM GMT)

தமிழகத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோச்னை நடத்தினார். 

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது தளத்தில், 19  மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனையானது நடைபெற்றது. ஆலோசனையின்போது பேசிய மு.க  ஸ்டாலின் தமிழகத்தில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்று உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்” என்றார்.  

மேலும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் நடத்திய பிறகு  ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு குறித்து அறிவிக்கப்படும் எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். 


Next Story