மாநில செய்திகள்

கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு + "||" + Coimbatore An oxygen cylinder exploded and an ambulance caught fire

கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு

கோவையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு
கோவையில் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்சில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,

கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அருகே ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, நோயாளியை செவிலியர்கள் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் - கலெக்டர் அறிவிப்பு
கொரோனா பரவலை கட்டுபடுத்த கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
2. கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று; சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு
கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் உயர்வதால், சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
3. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
4. கோவையில் 3 -ம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கோவையில் 3 -ம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
5. குமரியில் இருந்து கோவை, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கம்
குமரி மாவட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.