மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


மாவட்ட ஆட்சியர்களுடன்  முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 23 May 2021 6:04 AM GMT (Updated: 23 May 2021 6:04 AM GMT)

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய முழு ஊரடங்கு உத்தரவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 24-ந் தேதி (நாளை) காலையில் இருந்து இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சரிவர அமல்படுத்த முடியவில்லை. மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காதநிலையில் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

 முழு ஊரடங்கு நாளை அமல்படுத்துவதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.  தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

Next Story