24 மணி நேரமும் செயல்படும்; மின்தடை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


24 மணி நேரமும் செயல்படும்; மின்தடை தொடர்பாக வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 23 May 2021 8:38 PM GMT (Updated: 23 May 2021 8:38 PM GMT)

ஊரடங்கு மற்றும் கோடைகாலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஊரடங்கின்போது தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை, பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்-அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story