12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும்; தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் உறுதி


12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும்; தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 23 May 2021 9:45 PM GMT (Updated: 23 May 2021 9:45 PM GMT)

கொரோனா தொற்று அதிகரித்ததால் கடந்த 3-ந் தேதி தொடங்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

கொரோனா காரணமாக பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும்? எவ்வாறு நடத்தப்படும்? என்ற கேள்விகளுக்கான பதில் இதுவரை கிடைக்காத சூழலே இருக்கிறது. ஆனாலும் பொதுத்தேர்வு என்பது நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி வருகிறார்.இந்த குழப்பமான நிலையில், நாடு முழுவதும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு, மாநில வாரிய பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

கூட்டம் முடிந்தபின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.எஸ்.இ. தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தலாமா? என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைபற்றி நாமும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முக்கியமான தேர்வு ஆகும்.இதில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட்டாலும், ஏதாவது ஒரு கல்வி நிறுவனம் இந்த தேர்ச்சியை ஏற்று கொள்ளவில்லை என்றால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.எனவே அனைத்து மாநிலங்களும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீர வேண்டும் என்றுதான் முறையிட்டு இருக் 
கின்றன. நம்முடைய கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story