மாநில செய்திகள்

புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு + "||" + 9 new legislators were sworn in today

புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு

புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை

இதுவரை  பதவி ஏற்காத எம்எல்ஏக்கள் 9 பேர்,  சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று  எம்.எல்.ஏக்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 9 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

திமுக சார்பில் சிவசங்கர், மதிவேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாசலம் ஆகியோர் பதவியேற்றனர்.

அதிமுக சார்பில் வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை. புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
2. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
3. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
4. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு