விவசாயிகள் விளைவித்த காய்கறி-பழங்களை சந்தைப்படுத்துவது எப்படி? மாவட்ட அதிகாரிகள் செல்போன் எண்கள் வெளியீடு


விவசாயிகள் விளைவித்த காய்கறி-பழங்களை சந்தைப்படுத்துவது எப்படி? மாவட்ட அதிகாரிகள் செல்போன் எண்கள் வெளியீடு
x
தினத்தந்தி 24 May 2021 8:06 PM GMT (Updated: 24 May 2021 8:06 PM GMT)

பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலமாக விற்பனை: விவசாயிகள் விளைவித்த காய்கறி-பழங்களை சந்தைப்படுத்துவது எப்படி? மாவட்ட அதிகாரிகள் செல்போன் எண்கள் வெளியீடு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்கள் தடையின்றி கிடைக்க வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை ஆங்காங்கே விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விவசாயிகள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய தேவையான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் விளைவித்துள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்திட அல்லது அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல தேவையான அனுமதி பெறவும் மற்றும் உள்ளீடு ஏற்பாடுகள் செய்யவும் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை இணை-துணை இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்

செங்கல்பட்டு - 9940760038 - 9444178928

காஞ்சீபுரம் - 9629951863 - 9176647302

திருவள்ளூர் - 9361587466 - 9994094030

மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறைகளின் தலைமையிடத்தில் இயங்கி வரும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலமாகவும் தகவல் மற்றும் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம்.

வேளாண் விற்பனைத்துறை கட்டுப்பாட்டு அறை எண் - 044-22253884, தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டு அறை எண்- 1800 425 4444, வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டு அறை எண் -044-28594338.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story