பயன்படுத்த அனுமதி அளிக்காமல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விற்க ஒப்பந்தம் செய்வது எப்படி? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கேள்வி


பயன்படுத்த அனுமதி அளிக்காமல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விற்க ஒப்பந்தம் செய்வது எப்படி? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 24 May 2021 9:22 PM GMT (Updated: 24 May 2021 9:22 PM GMT)

பயன்படுத்த அனுமதி அளிக்காமல் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விற்க ஒப்பந்தம் செய்வது எப்படி? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கேள்வி.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பைசர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசி நிறுவனங்கள் மாநிலங்களிடம் (பஞ்சாப், டெல்லி) இணக்கமாக செயல்படாமல், மத்திய அரசுடன் மட்டுமே இணக்கமாக செயல்படுவதில் ஆச்சரியம் உள்ளதா? வெளிநாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு அளித்த உத்தரவு ஒரு இழிவான நடவடிக்கை ஆகும். பைசர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றால், அவர்கள் எப்படி மாநிலங்களிடம் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, விற்பனை செய்வது? தடுப்பூசிகள் கொள்முதல் செய்வதை மையப்படுத்தவேண்டும் என்ற எங்கள் ஆலோசனைகளையும், நீதிமன்றங்களின் ஆலோசனைகளையும் அரசு ஏற்க மறுத்துவிட்டது. மோடி அரசு கடுமையானது மட்டுமின்றி, கொடுமையானதும் கூட. அதேசமயத்தில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை தொடரும், மக்கள் பாதிக்கப்படுவார்கள், ஆயிரக்கணக்கானோர் இறப்பார்கள். இதுதான் சோகம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story