வில்லிவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற வாலிபர் கைது 30 குப்பிகள் பறிமுதல்


வில்லிவாக்கத்தில் கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்ற வாலிபர் கைது 30 குப்பிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 May 2021 7:57 PM GMT (Updated: 25 May 2021 7:57 PM GMT)

வில்லிவாக்கத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

கொரோனா பாதிப்பால் ஏற்படும் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தாக ‘ரெம்டெசிவிர் ’விளங்கி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மருந்து விற்பனைக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், இடைத்தரகர்கள் பலர் கள்ளச்சந்தையில் விற்று பெரும் லாபம் பார்த்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வில்லிவாக்கத்தில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தினை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பதாக குடிமை பொருள் கடத்தல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

30 ரெம்டெசிவிர் குப்பிகள்

இதையடுத்து வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவரை சோதனை செய்தபோது ‘ரெம்டெசிவிர்’ மருந்து குப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர், வில்லிவாக்கம் முதல் தெருவைச் சேர்ந்த செங்குட்டுவன் (வயது 34) என்பதும் இவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடமிருந்த 30 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story