ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 May 2021 2:50 AM GMT (Updated: 27 May 2021 2:50 AM GMT)

முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, ஊரடங்கை 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதல்-அமைச்சர் அறிவித்தார். 

இந்த சூழலில் தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவம், வருவாய்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story