பயணிகள் வருகை குறைவு: சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் 15-ந்தேதி வரை ரத்து


பயணிகள் வருகை குறைவு: சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் 15-ந்தேதி வரை ரத்து
x
தினத்தந்தி 27 May 2021 8:04 PM GMT (Updated: 27 May 2021 8:04 PM GMT)

பயணிகள் வருகை குறைவு: சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் சிறப்பு ரெயில் 15-ந்தேதி வரை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் வரத்து குறைவால் கீழ்கண்ட ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-திருவனந்தபுரம் (02627), சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் (06851) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி (02628), ராமேஸ்வரம்-எழும்பூர் (06852) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் மாதம் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-குருவாயூர் (06127), குருவாயூர்-சென்னை எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் ஜூன் 1-ந்தேதி முதல், 15-ந்தேதி வரை திருவனந்தபுரம்- குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story