கொரோனா பரவல்: குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் - மதுரை கோட்ட ரெயில்வே தகவல்


கொரோனா பரவல்: குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் - மதுரை கோட்ட ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 27 May 2021 10:25 PM GMT (Updated: 27 May 2021 10:25 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேயில் தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் பயணிகளின் வரத்து குறைவால் ரத்து செய்யப்பட்டன. இதற்காக அந்த ரெயில்களில் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, இந்த ரெயில்களை வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந் தேதி வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் வருகிற 16-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.06851) வருகிற 15-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்.06852) வருகிற 16-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக புனலூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 15-ந் தேதி வரையும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து மதுரை வர வேண்டிய சிறப்பு ரெயில் வருகிற 16-ந் தேதி வரையும் இருமார்க்கங்களிலும் திருவனந்தபுரம் வரை மட்டும் இயக்கப்படும். திருவனந்தபுரம்-புனலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந் தேதி வரையிலும், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரெயில் வருகிற 16-ந் தேதி வரையிலும் இரு மார்க்கங்களிலும் திருவனந்தபுரம் வரை மட்டும் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story