சென்னையில் இன்று பெட்ரோல் 23 காசுகள் உயர்வு


சென்னையில் இன்று பெட்ரோல் 23 காசுகள் உயர்வு
x
தினத்தந்தி 29 May 2021 1:26 AM GMT (Updated: 29 May 2021 1:26 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. 

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.28-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.89.39-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.95.51-க்கும், டீசல் விலை 26 காசுகள் ரூ.89.65-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story