ஊரடங்கினால் நோய்த்தொற்று ஓரளவு குறைந்துள்ளது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஊரடங்கினால் நோய்த்தொற்று ஓரளவு குறைந்துள்ளது;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 May 2021 6:35 AM GMT (Updated: 29 May 2021 6:35 AM GMT)

கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜுன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு  குறைந்து வந்தாலும், கோவையில் கொரோனா தொற்று பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார். 

இதுகுறித்த அறிக்கை ஒன்றை  முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒருவார ஊரடங்கால் கொரோனா எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் குறைந்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


Next Story