மாநில செய்திகள்

விரைவில் தமிழகம் மீளும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் + "||" + Tamil Nadu will be back soon - chief Minister MK Stalin's tweet

விரைவில் தமிழகம் மீளும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

விரைவில் தமிழகம் மீளும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
கொரோனா தொற்றில் இருந்து விரைவில் தமிழகம் மீளும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி வருகிற ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா சிகிச்சைக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை தந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், 

#COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்கொடை-செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்!
விரைவில் தமிழகம் மீளும்! என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.