‘7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை’; செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ


‘7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை’; செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 29 May 2021 9:47 PM GMT (Updated: 29 May 2021 9:47 PM GMT)

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை கலந்து கொள்கிறார்.

அதில் பேசுகையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, அந்த இயக்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும், எதிர்காலத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் விதமாக காங்கிரஸ் கட்சி தலைவர்களை மிரட்டி அவர்கள் கட்சியில் இணைத்து தற்காலிக வெற்றி பெற்று வருவதாகவும், இது நீண்ட நாள் நீடிக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் 7 பேர் விடுதலை குறித்து பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே இதுகுறித்து குறிப்பிட்டு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும், 7 பேர் விடுதலை என்பது அரசியல் கட்சிகளின் முடிவுதானே தவிர, ஒட்டுமொத்த தமிழக மக்களின் முடிவு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் எதிர்காலம், பாரதீய ஜனதா ஆட்சி மீதான பார்வை?, தமிழகத்தில் தாமரை எப்படி மலர்ந்தது? உள்ளிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.


Next Story