மாநில செய்திகள்

ஆப்லைன், பேப்பர்-பேனா முறையில் தேர்வு: என்ஜினீயரிங் படிப்புக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு + "||" + Offline, Paper-Pen Exam: Candidates can register for the April and May Semester Examination for Engineering; Anna University Announcement

ஆப்லைன், பேப்பர்-பேனா முறையில் தேர்வு: என்ஜினீயரிங் படிப்புக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆப்லைன், பேப்பர்-பேனா முறையில் தேர்வு: என்ஜினீயரிங் படிப்புக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம்; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யலாம் என்றும் தேர்வு ஆப்லைன், பேனா-பேப்பர் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆப்லைன், பேப்பர்-பேனா முறை
என்ஜினீயரிங் படிப்பு நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது. அந்த தேர்வுக்கான முடிவு ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மறு தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் அதில் பங்கு பெற்று எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன்படி அந்த தேர்வு 3 மணி நேரம் நடக்கும் என்றும், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் என்ன வினாத்தாள் வடிவமைப்பு பின்பற்றப்பட்டதோ, அதேபோல் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்து உள்ளது. அதாவது ஆப்லைன், பேப்பர் மற்றும் பேனா முறையிலான தேர்வாக இருக்கும் 
என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாநில பல்கலைக்கழகங்கள் பின்பற்றக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வும் மேற்சொன்ன படியே நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு மாணவர்களின் எண்களை அனைத்து கல்லூரி டீன், முதல்வர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்கான தேர்வு கட்டுப்பாட்டு இணையதளம் தயாராக இருக்கிறது என்றும், வருகிற 7-ந்தேதிக்குள் அனைத்து பணிகளையும் அதில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான கட்டணத்தை அனைத்து கல்லூரி டீன், முதல்வர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வருகிற 12-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் தனியாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் மறைவு; மு.க.ஸ்டாலின் இரங்கல்
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட என்ஜினீயரிங் தேர்வு முடிவு வெளியீடு; அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
என்ஜினீயரிங் படிப்புக்கான கடந்த ஆண்டு (2020) நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளை கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.
3. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு
அடுத்த மாதம் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
4. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
5. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.