கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடிய நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்


கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடிய நோய்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 29 May 2021 10:32 PM GMT (Updated: 29 May 2021 10:32 PM GMT)

பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை என்பது கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு ஏற்படும் புதுவகையான நோய் கிடையாது. இது ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்தான். கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் பயப்பட வேண்டாம். இதனை சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம். இதுவரை தமிழகத்தில் 400 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு யாரும் பீதியடைய வேண்டாம். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுத்ததாலும், ஸ்டீராய்டு கொடுத்ததாலும் அல்லது நீண்ட கால இணை நோயால் பாதிக்கப்பட்டதாலும், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது என 
கூறுகின்றனர். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இதன் மூலம் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. அதற்காக எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படும் என்பது தேவையில்லாத மாயை. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆம்போடெரிசின் தேவைப்படும். அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் சார்பில் மருந்தினை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story