மாநில செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி + "||" + Relief for children who have lost their parents to corona O. Panneer Selvam thanks chief-Minister

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து தருமாறு எனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.