மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு + "||" + Water for irrigation from Mulla Periyaru dam opened today

முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
தேனி,

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட முடியாத  சூழல் நிலவியது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக, நீர் இருப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.