மாநில செய்திகள்

‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டுவருவேன்’’ சசிகலா பேசிய ஆடியோவால் அரசியல் களத்தில் பரபரப்பு + "||" + "I will bring the party well with the blessings of MGR-Jayalalithaa," Sasikala said.

‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டுவருவேன்’’ சசிகலா பேசிய ஆடியோவால் அரசியல் களத்தில் பரபரப்பு

‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டுவருவேன்’’ சசிகலா பேசிய ஆடியோவால் அரசியல் களத்தில் பரபரப்பு
‘‘எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆசியுடன் கட்சியை நல்லபடியாக கொண்டு வருவேன்’’, என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை,

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானதும் அ.தி.மு.க.வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மார்ச் 3-ந்தேதி, ‘அரசியலை விட்டு விலகுகிறேன் என்று கூறி எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டார் சசிகலா.


அதனைத்தொடர்ந்து சசிகலா சொந்த ஊருக்கு சென்றார். பல கோவில்களுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.

திடீர் திருப்பம்

தற்போது திடீர் திருப்பமாக தொண்டர்களுடன், சசிகலா பேசும் ஆடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜா ரகுபதி என்ற தொண்டரிடம், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆடியோ உரையாடல் தொகுப்பு விவரம் வருமாறு:-

நிச்சயமாக வந்துடுவேன்

சசிகலா:- ஹலோ...

தொண்டர்:- அம்மா... வணக்கம்மா...

சசிகலா:- வணக்கம். நல்லா இருக்கீங்களா....

தொண்டர்:- நல்லா இருக்கேன்மா. தினந்தோறும் உங்களுக்காகத்தான் பிரார்த்தனை செஞ்சுகிட்டு இருக்கேன்மா. நீங்க வந்துதான்மா தமிழக மக்களை காப்பாத்தணும். உங்களுக்காக தினமும் முருகனை வேண்டிக்கிட்டு இருக்கேன்மா. (உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்)

சசிகலா:- சரி சரி ஒன்னும் கவலைப்படாதீங்க... எப்படியும் நான் வந்துடுவேன். கவலைப்படாதீங்க... நிச்சயம் வந்துடுவேன்.

தொண்டர்:- தமிழகமே நாதியின்றி அனாதையாக இருக்குமா... நீங்க வந்துதான்மா காப்பாத்தனும்...

சசிகலா:- நிச்சயமாக வந்துடுவேன். கவலையேபடாதீங்க... கட்சியை நல்லபடியா கொண்டுபோகனும். அம்மா (ஜெயலலிதா) மாதிரி ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்பதுதான் என்னோட எண்ணமும். கொரோனா காலம் என்பதால் தொண்டர்களை நேரில் சந்திக்க முடியவில்லை.

தீக்குளிக்க வந்தேன்

தொண்டர்:- அம்மா நான் தீக்குளிக்க வந்தேன்மா. என்னை போலீஸ்காரங்க பிடிச்சு கொண்டுபோயிட்டாங்க...

சசிகலா:- அதெல்லாம் வேண்டாம். நல்லமுறையில் நாம் எதையுமே செய்யலாம்.

தொண்டர்:- ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன்மா...

சசிகலா:- அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க. விரைவில் வந்துடுவேன். கட்சி நல்லா இருக்கும். நிச்சயம் நான் வந்து கட்சியை சரியா கொண்டுவந்துடுவேன். தலைவர் (எம்.ஜி.ஆர்.), அம்மா (ஜெயலலிதா) ஆசியோட நிச்சயம் இதை நான் செய்வேன்.

தொண்டர்:- நிச்சயம் அந்த கோல்டு கலர் ஒளி வெளிச்சத்துல நீங்க காரில் வரணும். உங்க முகத்தை நாங்க எல்லோரும் பாக்கணும்மா...

சசிகலா:- கவலைப்படாதீங்க நிச்சயம் வருவேன்.

விரைவில் சந்திப்பேன்

தொண்டர்:- தலைவர் (எம்.ஜி.ஆர்.), அம்மாவுக்கு (ஜெயலலிதா) பிறகு ரோஜாப்பூ போல அப்படி ஒரு முகராசி உங்களுக்கு இருக்கு. ஜாதக ரீதியில கூட உங்களுக்கு கடவுள் அருள் இருக்கும்மா? மக்களை கவர்ந்திழுக்கும் சக்தி உங்களுக்கு இருக்கும்மா? நீங்க சூரிய ஆட்சிக்கு உரியவரும்மா... அவசரத்தில் வந்தவர்கள் எல்லாம் நீண்டகாலம் இருக்கமாட்டங்கம்மா...

சசிகலா:- சரி சரி சரி...

தொண்டர்:- நீங்க மறுபடியும் திரும்பி வரணும்மா...

சசிகலா:- சரி சரி. விரைவில் வந்து உங்க எல்லோரையும் சந்திக்கிறேன்.

தொண்டர்:- உங்களை நேரில் வந்து பாக்கணும்மா...

சசிகலா:-. கொரோனா தாக்கம் குறையட்டும். அதன்பிறகு சொல்கிறேன்.

‘எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்’

தொண்டர்:- கடைசி ஆயுதமா நீங்க வந்துட்டீங்கம்மா... அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிருப்தியில்தான் தேர்தலில் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டாங்கம்மா? நீங்க இல்லாததால இது நடந்துடுச்சும்மா?

சசிகலா:- சரி சரி விடுங்க பரவாயில்லை. நாம அதை எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்.

தொண்டர்:- மக்கள் ஏக்கத்துடன் இருக்காங்கம்மா.. நீங்க வந்து எல்லாத்தையுமே சரிபண்ணிடுங்கம்மா... கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரணும்மா... நீங்க நல்லா இருக்கணும்மா...

சசிகலா:- சரி சரி நன்றி.

இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் சசிகலா முன்னிலையில் நடந்தது
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
2. சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.
3. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
4. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
தாத்தா சொத்தில் தராத உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
5. வேங்கைவாசல் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
சென்னையை அடுத்த சேலையூர் அருகே வேங்கைவாசல் ஊராட்சியில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன.