வாடகை வாகன ஓட்டுனர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு அவகாசம் தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்


வாடகை வாகன ஓட்டுனர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு அவகாசம் தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்
x

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் வாடகை வாகன ஓட்டுனர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு அவகாசம் தமிழக அரசுக்கு, சீமான் வேண்டுகோள்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுனர்கள், உதவியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிக்கு வாகனங்களை இயக்கிவந்த வாடகை வாகன ஓட்டுனர்கள், தங்களது வாகனக் கடனுக்கான மாதத் தவணையைக்கூடச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் வாடகை வாகனங்களுக்கான கடன் தவணையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சிறிதும் மனிதத்தன்மையற்ற செயலாகும். எனவே தமிழக அரசு, வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை அடுத்த ஆண்டு மே மாதம் வரை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது எனவும், இந்த உத்தரவானது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு, குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் வணிக ஓட்டுனர் உரிமம் அல்லது ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்களுக்கும் துயர் துடைப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் அடுத்த ஓராண்டு காலத்திற்குச் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story