ஜூன் 02: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jun 2021 1:07 AM GMT (Updated: 2 Jun 2021 1:07 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 95.99 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்தது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. 

இதனால் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நேற்று பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 95.99 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story