குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்


குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 3 Jun 2021 6:23 AM GMT (Updated: 3 Jun 2021 6:23 AM GMT)

கொரோனா ஊரடங்கால் அதிகரித்துள்ள குழந்தைகள் திருமணத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எந்த ஒரு பேரிடர் காலத்திலும், இளம் சிறார்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்வர். குறிப்பாக, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கல்வி இடைநிற்றல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாவர்.கடந்தாண்டு ஊரடங்கு தொடங்கிய போதே 1.30 கோடி குழந்தை திருமணம் நடக்கும் என, 'யுனிசெப்' எச்சரித்திருந்தது.

தற்போது தமிழகத்தில், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக சி.ஆர்.ஓய்., என்ற தன்னார்வல அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020 மே மாதம் மட்டும் சேலத்தில் 98; தர்மபுரியில் 192 என, தமிழகத்தில் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.

கடந்தாண்டை விட இது அதிகம்.உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறினால், இந்தாண்டும் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும். தமிழக அரசு, இவ்விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story