தமிழக அரசு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சி பொறியில் சிக்க கூடாது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி


தமிழக அரசு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சி பொறியில் சிக்க கூடாது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
x
தினத்தந்தி 3 Jun 2021 4:56 PM GMT (Updated: 3 Jun 2021 4:56 PM GMT)

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. நடத்தும் 12-ம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. இந்த கொரோனா காலத்தில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்தால் வானம் இடிந்து விடுமா?.

எனவே, தமிழ்நாடு அரசு பிளஸ்-2 தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல், மாணவர்கள் நலன், பாதுகாப்பை உறுதி செய்து - தேர்வை நடத்துவதும், அதன் அடிப்படையில் தொழிற்படிப்பு, பட்டப் படிப்புகளுக்கு நுழைவு வாயில் உருவாக்குவதும் அவசியம் என்பது நமது உறுதியான கருத்து, வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story