மாநில செய்திகள்

ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது + "||" + Cinema actor arrested for Rs 7 lakh online scam

ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது

ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது
ரூ.7 லட்சம் ஆன்லைன் மோசடி சினிமா துணை நடிகர் கைது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சடையம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கதிரவன் (வயது 40). இவர் திருப்பூரை சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (65). பஸ் டிரைவர் மற்றும் திரைப்பட துணை நடிகர். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் தங்களிடம் 500 ரூபாய் செலுத்தினால் ஆன்லைன் மூலம் தினசரி 36 ரூபாய் வட்டியாக தருவதாகவும், பல மடங்கு தொகை செலுத்தினால் அதற்கேற்ப வட்டி கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியதாகவும், இதை நம்பி பலர் அவர்களிடம் பணம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கூறியபடி வட்டி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த மாதேஷ் என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், முதற்கட்டமாக அவர்கள் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதன்குமார், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கொடூரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
தஞ்சையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2. கள்ளக்காதல் தகராறில் ரவுடியின் மனைவி வெட்டிக்கொலை 4 பேர் கைது
கள்ளக்காதல் தகராறில் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. முகநூலில் பெண் போல பழகி ஏமாற்றியவர் கொலை காஞ்சீபுரம் வாலிபர் கைது
எட்டயபுரம் அருகே முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றியவரை கொலை செய்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளனார்.
4. திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிலரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் தேர்தல் பகை காரணமாக அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து தடிகளால் தாக்கிக் கொண்டனர்.
5. மத்திய பிரதேசத்தில் போலியான பான், வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்த 2 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.