மாநில செய்திகள்

மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது - எல்.முருகன் அறிக்கை + "||" + The Central Government also acts as the Government to resolve the grievances of the people - L. Murugan Report

மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது - எல்.முருகன் அறிக்கை

மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது - எல்.முருகன் அறிக்கை
மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, இது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுடிருப்பதாவது:- "தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியது அறிந்து மிக்க மகிழ்ச்சி. படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை 35 ரயில்கள் மூலமாக 2,18,896 டன் ஆக்சிஜன் தமிழகம் வந்துள்ளது. நேற்றும் 2 ரயில்களில் 159 டன் ஆக்சிஜன் வந்து சேர்ந்துள்ளது. இதையும் சேர்த்து தமிழகத்திற்கு மொத்தம் 2,34,758 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. இன்னும் தேவைப்பட்டாலும் மத்திய அரசு அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது. தமிழக நலனில் அதிக அக்கறை கொண்ட அரசு மத்தியில் ஆளும் மோடி அரசு. தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணியினைத் துரிதப்படுத்த 3 பொதுத்துறை நிறுவனங்கள் ஐஐஎல், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பிப்கால் & ஹாப்கைன் பயோபார்ம் சூட்டிகல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் நிதி உதவி செய்துள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் எனச் செய்திகள் வந்தன. அக்கடிதத்தில் தடுப்பூசிகளை ஒதுக்கீடுகள் செய்வதில் தமிழகத்திற்கு முதலிடமும், செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தை தமிழக கட்டுப்பாட்டில் தந்தால் தடுப்பூசி விரைந்து தயாரிக்க இயலும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசே அதனைத் தொடங்க உள்ளதாகச் செய்தி அறிந்தோம் எனத் தெரிவித்து, அதனை உடனடியாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியுள்ளார். தமிழக பாஜக சார்பிலும் இதே கருத்தினை வலியுறுத்தி உள்ளோம். சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் இதற்கான துரிதப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளோம். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு உள்ளதாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தக் கூடாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டில் 3 நிறுவனங்கள் மட்டுமே ஆம்போடெரிசின் - பி மருந்தைத் தயாரிப்பதால் நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. இம்மாதிரியான சூழல் இதற்கு முன்பு இல்லாததால், அதற்கான உற்பத்தி தேவை இல்லாமல் இருந்தது. இப்போது நெருக்கடியைத் தீர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது. உரிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் அரசு இது". இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன - மத்திய அரசு
ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை முழுதுமாக திரும்பிய பிறகு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது.
2. மத்திய அரசுக்கான நிலுவைத்தொகை; தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், 1999-ல் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு லைசன்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.
3. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மியான்மர் நாட்டினருக்கு வேலையா? மத்திய அரசு விளக்கம்
மியான்மர் நாட்டவர்களுக்கு அப்படி வேலைவாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: மத்திய அரசு
கொரோனா 3-வது அலை பற்றிய கணிப்புகளை வானிலை முன் அறிவிப்பு போல சாதாரணமாக மக்கள் எடுத்துக்கொள்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. மத்திய அரசு-டுவிட்டர் மோதல் விவகாரம்: இந்தியாவில் பணிபுரிபவர்கள் நாட்டின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: தகவல் தொழில்நுட்ப மந்திரி
மத்திய அரசுடன் டுவிட்டர் நிறுவனம் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் வசிப்பவர்களும், பணி புரிபவர்களும் நாட்டின் விதிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறைக்கான புதிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபட தெரிவித்து உள்ளார்.