'கோவின் இணையதளத்தில் 2 நாளில் தமிழ் மொழியும் இடம்பெறும்' மத்திய அரசு உறுதி அளித்ததாக, தமிழக அரசு தகவல்


கோவின் இணையதளத்தில் 2 நாளில் தமிழ் மொழியும் இடம்பெறும் மத்திய அரசு உறுதி அளித்ததாக, தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2021 8:01 PM GMT (Updated: 4 Jun 2021 8:01 PM GMT)

'கோவின் இணையதளத்தில் 2 நாளில் தமிழ் மொழியும் இடம்பெறும்' மத்திய அரசு உறுதி அளித்ததாக, தமிழக அரசு தகவல்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்தநிலையில் இன்று (நேற்று) புதிதாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தநிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதன்படி இந்த கோரிக்கையை மத்திய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலர் வலியுறுத்தினார். அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்த கட்டத்தில் 2 நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என மத்திய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story