மாநில செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார் பரபரப்பு வாக்குமூலம் + "||" + School teacher jailed for sexual harassment

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார் பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீஸ் காவல் விசாரணை முடிந்து நேற்று மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் பாலியல் புகார் புயல் பெரிய அளவில் பள்ளி ஆசிரியர்களை தாக்கி வருகிறது. அதில் சிக்கி முதலில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் (வயது 59) ஆவார். ஆன்லைன் மூலம் பாடம் நடத்திய போது மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கோர்ட்டு அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து அவர் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

அவருடன் வேலை பார்த்த சக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் போன்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீஸ் காவலின் போது ஆசிரியர் ராஜகோபாலனிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. அவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு
பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. ராக் ஸ்டார், மெட்ராஸ் கபே, ஹவுஸ்புல் 3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
2. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குழந்தையை கடத்த முயற்சி வெல்டருக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து குழந்தையை கடத்த முயன்ற வெல்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. சென்னையில் நடந்த கொடூர சம்பவம்: அறையில் அடைத்து வைத்து, 15 வயது நேபாள சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
சென்னையில் தனி அறையில் அடைத்து வைத்து 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வங்கி காவலாளி உள்ளிட்ட 3 காமக்கொடூரர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. 8 ஆண்டுகளுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் மீது போலீசில் பாலியல் புகார் சென்னையில் தொடரும் 4-வது சம்பவம்
சென்னையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு பாலியல் ெதால்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
5. 8 ஆண்டுகளுக்கு பிறகு கராத்தே மாஸ்டர் மீது போலீசில் பாலியல் புகார் சென்னையில் தொடரும் 4-வது சம்பவம்
சென்னையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனக்கு பாலியல் ெதால்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.