மாநில செய்திகள்

மேட்டூர் அணை இன்றைய நீர்வரத்து நிலவரம் + "||" + Mettur Dam Today's water level

மேட்டூர் அணை இன்றைய நீர்வரத்து நிலவரம்

மேட்டூர் அணை இன்றைய நீர்வரத்து நிலவரம்
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.90 அடியாக உள்ளது.
சேலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வரும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.02 கன அடியில் இருந்து 96.90 கன அடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்திருக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அணையின் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் குறைந்து வருகிறது என்றும் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 671 கன அடியாக இருந்த நிலையில், இன்று 555 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 60.89 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 76.18 அடியாக உயர்ந்துள்ளது.
2. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75.29 அடியாக உயர்ந்துள்ளது.
3. மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 73.83 அடியாக உயர்ந்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நேற்று 4,379 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4,023 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
5. ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை நடைபெற்கிறது.