பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா? - அனைத்துக்கட்சி சட்டமன்ற பிரதிநிதிகள் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Jun 2021 7:27 AM GMT (Updated: 5 Jun 2021 7:27 AM GMT)

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை, 

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 13 கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் வேல்முருகன், பாலாஜி, செல்வப்பெருந்தகை, சதன் திருமலைக்குமார், ஜவாஹிருல்லா, ஜி.கே மணி உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 

கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த பாஜக சார்பில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவை போல, பிற கட்சிகளும் பொதுத் தேர்வை நடத்த வேண்டாமென தெரிவிப்பதாக தெரிகிறது. 

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2  பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story