27 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jun 2021 1:58 AM GMT (Updated: 6 Jun 2021 1:58 AM GMT)

தமிழகம் முழுவதும் 27 போலீஸ் சூப்பிரண்டுகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 27 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை அரசு நேற்று இரவு பிறப்பித்தது. மாற்றப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களுக்கான புதிய பதவி பற்றிய விவரங்கள் வருமாறு:-

1.டாக்டர் எம்.சுதாகர்-சைபர் கிரைம் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

2.விஜயகுமார்-திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.சிபிசக்கரவர்த்தி-சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

4.ஓம்பிரகாஷ் மீனா-நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியில் இருந்த இவர், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

5.ஆலடிப்பள்ளி பவன் குமார் ரெட்டி-திருச்சி சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றிய இவர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக போறுப்பு ஏற்பார்.

6.ஸ்ரீநாதா-மயிலாடுதுறை மாவட்ட சூப்பிரண்டான இவர், விழுப்புரத்துக்கு மாற்றப்பட்டார்.

7.சக்திகணேசன்-நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், கடலூர் மாவட்டத்தில் பொறுப்பு ஏற்பார்.

8. பா.மூர்த்தி-சேலம் குற்றப்பிரிவு-போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றிய இவர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

9. சுந்தரவடிவேல்-திருப்பூர் தலைமையக துணை கமிஷனராக பதவியில் இருந்த இவர், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுவார்.

10. எஸ்.மணி-சென்னை அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

11.பெரோஸ்கான்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

12.நிஷா பார்த்திபன்-பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டான இவர், புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டார்.

13.ஸ்ரீநிவாசன்-நெல்லை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனரான இவர், திருவாரூர் மாவட்ட சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

14.ஜவஹர்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

15.சுகுணாசிங்-தென்காசி போலீஸ் சூப்பிரண்டான இவர், மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டார்.

16.ஆஷிஸ்ராவத்-புதுடெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படை சூப்பிரண்டான இவர், நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக நியமனம்.

17.சசிமோகன்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

18.ஷேசாங்க்சாய்-கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

19. ஸ்ரீஅபினவ்-கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

20. சரோஜ்குமார் தாக்கூர்-சைபர் கிரைம் (3) சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

21 .கலைச்செல்வன்- போதைப்பொருள் சி.ஐ.டி.சூப்பிரண்டான இவர், தர்மபுரி சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

22.சாய்சரண் தேஜஸ்வி-தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், கிருஷ்ணகிரி சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

23. பாஸ்கரன்-அரியலூர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், மதுரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

24. மனோகர்-நலப்பிரிவு உதவி ஐ.ஜி.யாக பதவி வகித்த இவர், விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

25. செந்தில்குமார்-திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டான இவர், சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

26. டாங்கரே பிரவீன் உமேஷ்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

27.கிருஷ்ணராஜ்-காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

மேற்கண்டவாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story